மொடக்குறிச்சி,மார்ச்14: சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தில் காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் மாசி மக பொங்கல் விழா 11-ம் தேதி காலை கணபதி யாகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பர நாதருக்கு 108 தீர்த்தக்குட அபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாசி மக தினத்தையொட்டி காலை பக்தர்கள் கொடுமுடியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து தீர்த்தக்குட ஊர்வலமும், அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பொங்கல் மாவிளக்கு திருவீதி உலாவும் அதை தொடர்ந்து மாவிளக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் மஞ்சள் நீராட்டு திருவீதி உலாவுடன் மாசிமாகம் பொங்கல் விழா நிறைவு பெற்றது.
The post தாண்டாம்பாளையம் காமாட்சியம்மன் கோயிலில் மாசி மக பொங்கல் விழா appeared first on Dinakaran.