அமைச்சரிடம் வாழ்த்து கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

ஈரோடு,மார்ச்14: பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் “ஆங்கில மொழி இலக்கியத்தில் புதுமைகள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் காந்தி கிராமப்புற நிறுவனத்தின் பேராசிரியர் பாஸ்கரன், திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழக பேராசிரியர் கார்த்திகா, திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியின் பேராசிரியர் ராஜாராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந் துகொண்டு பேசினர். இதில் 267 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து கருத்தரங்கு மலர் வெளி யிடப்பட்டது. இந்த கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் வி.பாலுசாமி, அறிவியல் மற்றும் மானுடவியல் சார் துறை முதன்மை ஒருங்கிணைப்பாளர் சதுரைசாமி, ஆங்கிலத்துறை தலைவர் ரஜினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post அமைச்சரிடம் வாழ்த்து கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: