ஹோலி பண்டிகை வடமாநிலத்தினர் உற்சாக கொண்டாட்டம்

ஈரோடு, மார்ச் 15: ஈரோட்டில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த மக்கள் நேற்று ஹோலி பண்டிகையை வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி உற்சாகமாக கொண்டாடினர். ஹோலி பண்டிகை வடமாநிலங்களில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த மக்கள் நேற்று உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில், ஈரோடு மாநகரில் வடமாநிலத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் இடமான இந்திரா நகர், அக்ரஹார வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி,என்.எம்.எஸ். காம்பவுண்ட்,தெப்பக்குளம் வீதி,வளையக்கார வீதி,திருநகர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகையை சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வயது வித்தியாசமின்றி வண்ண பொடிகளை ஒருவருக்கு ஒருவர் தூவியும், உடலில் பூசியும், தண்ணீரில் வண்ண பொடிகளை கலந்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும் உற்சாகமாக கொண்டாடினர்.

மேலும், சில பகுதிகளில் மலர்களை தூவியும் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர்.ஹோலி கொண்டாட்டம் முடிந்ததும் புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.அண்டை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு இனிப்புகளை பரிமாறி ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

The post ஹோலி பண்டிகை வடமாநிலத்தினர் உற்சாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: