ஊத்தங்கரை, மார்ச் 19: ஊத்தங்கரை அருகே படப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) பிரதீபா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் சாந்தி, வட்டார வள மைய பயிற்றுனர் ஜெயமணி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் சுமித்ரா, கல்வி ஆர்வலர் விமலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி மாணவர்களின் திறன் வெளிப்பாடுகளாக கவிதை கூறுதல், பாட்டு பாடுதல், கதை கூறுதல், தமிழ் மொழி பற்றி பேசுதல் ஆகியவையும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் பிருந்தாவனம், சென்னம்மாள், விசாலாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.
The post ஊத்தங்கரை அருகே படப்பள்ளி அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.