கிருஷ்ணகிரி, மார்ச் 18: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சரவணன்(9), அலசீபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 15ம் தேதி, சரவணன் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றான். ஆனால், பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவனை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி முருகன் உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விளையாட சென்ற பள்ளி மாணவன் மாயம் appeared first on Dinakaran.