தளி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

தேன்கனிக்கோட்டை, மார்ச் 15: தளி வட்டார வேளாண்மை துறையில், அட்மா திட்டத்தின் கீழ், பெங்களூருவில் அமைந்துள்ள ஐசிஏஆர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, காய்கறி பயிர்களில் உயர் தொழில்நுட்ப சாகுபடி குறித்த கண்டுணர்வு சுற்றுலாவிற்கு, தளி வட்டாரத்தில் இருந்து விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். பேராசிரியர் மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் சங்கர், காய்கறி பயிர்களில் மேம்படுத்தப்பட்ட ரகங்கள், மிளகாய், பூசணி, கொத்தமல்லி, கீரை, கேரட், பட்டாணி, காராமணி, வெண்டை உள்ளிட்ட காய்கறி பயிர்களில் சாகுபடி தொழில்நுட்ப முறைகள் பற்றியும், பாதுகாக்கப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப முறைகள் பற்றியும், காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக கூறினார். பேராசிரியர் செந்தில்குமார், உயர் ரக நாற்றாங்கால் வளர்ப்பு தொழில் நுட்பங்களான பாலீத்தீன் தாள்களால் மூடுதல், இயற்கையான காற்றோட்டம் கொண்ட பாலிகவுஸ் அமைத்தல், நோய் தடுப்பு முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிந்தனா, பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

The post தளி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா appeared first on Dinakaran.

Related Stories: