கிருஷ்ணகிரி, மார்ச் 15: கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து, கடந்த 4 நாட்களாக பூஜ்ஜியமாக இருந்த நிலையில், நேற்று விநாடிக்கு 54 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 10ம் தேதி முதல் நீர்வரத்து விநாடிக்கு பூஜ்ஜியமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 54 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், நீர்மட்டம் 49.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து வலது, இடதுபுறக் கால்வாய்கள் மற்றும் ஊற்று கால்வாய் வழியாக, விநாடிக்கு 177 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில், வெப்பம் குறைந்து காணப்பட்டது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, சாலைகளில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.
The post கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.