மேலும் மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஸ்வினி துப்பட்டாவால் வீட்டில் உள்ள கம்பியில் தூக்கில் தொங்கினார். வெளியே சென்று இருந்த அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். உடனடியாக அஸ்வினியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அஸ்வினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மன அழுத்தம் காரணமாக 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.