சென்னை, மார்ச் 15: பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது : நீர்வளத்தினை பாதுகாத்து மேம்படுத்திடும் பொருட்டு, வரும் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டம் ரூ.2000 கோடியில் செயல்படுத்தப்படும். சென்னைக்கு அருகில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலத்தில் பருவ காலங்களில் கிடைக்கும் வெள்ள நீரின் ஒரு பகுதியை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் ஓஎம்ஆர் சாலை மற்றும் இசிஆர் சாலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் 4,375 ஏக்கர் அரசு நிலப்பரப்பில் சுமார் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ஆண்டிக்கு 2.25 டிஎம்சி அளவிற்கு வெள்ள நீரினை சேமிக்கும் வகையில் சென்னையின் ஆறாவது நீர்த்தேக்கமாக புதிய நீர்தேக்கம் ஒன்று ரூ.350 கோடி அமைக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கக்கூடிய 170 எம்எல்டி குடிநீரை கொண்டு சென்னை பெருநகர மக்களின் குடிநீர்த் தேவை குறிப்பிட்டத்தக்க அளவில் நீண்ட காலத்திற்கு நிறைவு செய்யப்படும். இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீர்வளத்துறைக்கு ரூ.9460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ரூ.350 கோடியில் சென்னை அருகே 6வது நீர்த்தேக்கம் appeared first on Dinakaran.