மெட்ரோ பணி காரணமாக நாளை முதல் ஐ.சி.எப் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

 

சென்னை, மார்ச் 15: மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் ஐ.சி.எப் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்து, காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ பணி நடைபெற்று வருவதால் வில்லிவாக்கம் மாநகர பேருந்து நிலையம் ஐ.சி.எப் அருகில் ஏற்கனவே போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில், நாளை காலை 10 மணி முதல் ரெட்டி தெரு மற்றும் தெற்கு மாடவீதி ஆகிய 2 வீதிகளுக்கு வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு பாதசாரிகள் மட்டும் செல்ல வழிவகை செய்யப்படும்.

பாடி மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் எம்டிஎச் ரோடு, சிவன் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சிவன் கோயில் தெற்கு மாட வீதி, பாலி அம்மன் கோயில் தெருவில் வலதுபுறம் திரும்பி பெருமாள் கோயில் வடக்கு தெரு மற்றும் மேட்டு தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஐ.சி.எப் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் எம்டிஎச் ரோடு, சிவன் கோயில் தெரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சிவன் கோயில் மேற்கு மாடவீதி, பாலி அம்மன் கோயில் தெரு வழியாக பெருமாள் கோயில் வடக்கு மாடவீதி வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மெட்ரோ பணி காரணமாக நாளை முதல் ஐ.சி.எப் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: