சென்னை : பிரதமர் மோடி வருகையால் தமிழ்நாட்டு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்த முறையும் தமிழ்நாட்டிற்கு வெறும் கையோடுதான் வரப்போகிறார் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தர வேண்டிய நிதியை பிரதமர் மோடி தரப்போவது இல்லை என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
