திண்டுக்கல்: மருதாநதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைக்காகவும் 13.01.2026 முதல் 17.01.2026 வரை ஐந்து நாட்களுக்கு, வினாடிக்கு 100 கன அடி வீதம், மொத்தம் 43.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
அதேபோல தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமம், மஞ்சளாறு அணையிலிருந்து 13.01.2026 முதல் 17.01.2026 வரை ஐந்து நாட்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் மொத்தம் 86.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.
