550 நபர்களுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ஆர்.பிரியா

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய மற்றும் அறநிலைத்துறை துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி, வி.க.நகர் மண்டலம், சோமசுந்தரம் லைன் பகுதியில் இன்று (12.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/-வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய அறிவுறுத்தலுக்கிணங்க பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று வி.க.நகர் மண்டலம் வார்டு-74க்குட்பட்ட சோமசுந்தரம் லைன் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் , அனைத்து சமூக மக்கள் வைத்து கொண்டாடிய சமத்துவ உங்கள் விழாவில் பங்கேற்றார். மாட்டுப் பொங்கலை சிறப்பித்திடும் வகையில் பசு மாடு மற்றும் கன்றுகளுக்கு இனிப்பு கரும்பு மற்றும் பழங்களை வழங்கினார். பொங்கல் திருநாளில் முக்கிய விளையாட்டான உறியடி விளையாட்டினை மேயர் உறியடித்து தொடங்கி வைத்தார்.

பின்னர், வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 550 நபர்களுக்கு வேட்டி, சேலை, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு மற்றும் நெய் உள்ளடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டியினை வழங்கி, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் ஶ்ரீராஜேஸ்வரி, கு, சாரதா, யோக பிரியா, எம்.தாவுத் பீ, பி.அமுதா, ரா.சரிதா, சி.ஶ்ரீதனி, புனிதவதி எத்திராஜன், மு.சரவணன், எல்.ரமணி, எஸ்.தமிழ்செல்வி, ந. உஷா, க. பொற்கொடி, டாக்டர் பூர்ணிமா, க.வி.நாகவள்ளி, சா.உமா, சுதா தீனதயாளன், லதா வாசு மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: