சென்னை: கடன் தொகையை முழுமையாக செலுத்தினால் வா வாத்தியார் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என ஐகோர்ட் கூறியுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.3.75 கோடி செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் ஞானவேல்ராஜா கடன் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. ரூ.21.78 கோடியை செலுத்தாமல் இருந்ததால் வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. வா வாத்தியார் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், வெளியிட அனுமதி கோரியும் ஞானவேல்ராஜா மனு அளித்துள்ளார்.
கடன் தொகையை முழுமையாக செலுத்தினால் வா வாத்தியார் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ஐகோர்ட் அனுமதி!!
- உயர் நீதிமன்றம்
- வா வாதியார்
- பொங்கல்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஞானவேல் ராஜா
- அர்ஜுன்லால் சுந்தரதாஸ்
