காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க தடை..!!

சென்னை: காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் குளிக்க சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக 8 ஆம்புலன்ஸ், மீட்புப் பணிக்காக 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும். காணும் பொங்கலன்று கூட்டம் கூடும் என்பதால் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க அடையாள அட்டை தரப்படும். ட்ரோன்கள் மூலம் கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: