ஜெயங்கொண்டம், ஜன.5: அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டதல் 4ம் தேதி வரை (தொடர் விடுமுறை) கனரக வாகனங்களின் இயக்க நேர கட்டுப்பாடு தளர்வு அமலில் இருந்தது. அரையாண்டு விடுமுறை 4ம் தேதி நேற்றுடன் முடிந்தது. 5ம் தேதி (இன்று) முதல் பள்ளிகள் தொடங்க உள்ளன. இதனையொட்டி கனரக வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆணையின் படி, மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் சாலைகளில் இயக்க தடையானது மீண்டும் அமலுக்கு வந்தது. கனரக வாகன ஓட்டுநர்கள் வாகன இயக்க நேர கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றி பாதுகாப்பாக இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
