குவாரி உரிமையாளரிடம் நிதி கேட்டு மிரட்டிய தேமுதிக ஒன்றிய செயலாளர் கைது

வானூர் ஜன. 8: கிளியனூர் அருகே உள்ள தென்கோடிபாக்கம் கிராமத்தில் கல்குவாரி நடத்தி வருபவர் சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (50). இவர் குவாரியில் இருக்கும்போது தேமுதிக கிளியனூர் ஒன்றிய செயலாளர் தணிகைவேல் (35) மற்றும் நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் கலியமூர்த்தி (35) ஆகிய இருவரும் தேமுதிக மாநாட்டிற்கு நிதி கேட்டுள்ளனர். குவாரி உரிமையாளர் நிதி தர மறுத்ததால் மிரட்டல் விட்டுள்ளனர். இது தொடர்பாக குவாரி உரிமையாளர் பாலகிருஷ்ணன் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து தேமுதிக ஒன்றிய செயலாளர் தணிகைவேலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கலியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Related Stories: