கள்ளக்குறிச்சி, ஜன. 8:கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் கடந்த 5ம்தேதி நடைபெற்ற அதிமுக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் ரங்கன்பங்கேற்றபோது கூட்ட நெரிசலில் ரங்கன் கால்சட்டைபையில் இருந்த ரூ.10,000 மற்றும் அதே கூட்டத்தில் இருந்த கணபதி மகன் செல்வகுமாரிடம் ரூ.3500, மூர்த்தி மகன் விஜய்யிடம் ரூ.8600 என மொத்தம் ரூ.22,100 பணத்தை மர்ம ஆசாமிகள் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். இதுகுறித்து ரங்கன் கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் மணிமேகலை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் ஆந்திரா மாநிலம் கேட்புத்தூர் பகுதியை சேர்ந்த பாபு மகன் சுரேஷ்(38), சென்னை அவடி பகுதியை சேர்ந்த மணி மகன் குமார்(48), சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(37) ஆகியோர் ஒன்று சேர்ந்து அதிமுக நிர்வாகி உள்ளிட்டவர்களிடம் கூட்டத்தில் பணம் பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் உள்ளிட்ட மூன்று பேரைம் போலீசார் கைது செய்தனர்.
