பண்ருட்டி, ஜன. 8: பண்ருட்டியை அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகர்(66). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன்(65). இவர்களுக்குள் வீட்டுமனை பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று மாணிக்கவாசகர், அவரது மனைவி சாந்தி ஆகியோரை முருகன், அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும் ராஜா ஆகியோர் அசிங்கமாக திட்டி, தடி மற்றும் கத்தியால் தாக்கினர். இந்த தகராறில் முருகனும் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த மாணிக்கவாசகர், சாந்தி மற்றும் முருகன் ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இது குறித்து மாணிக்கவாசகர், முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கவாசகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
