சென்னை காவல் துறையில் 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை, ஜன.8: சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை சூளைமேடு சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சக்திவேலாயுதம் வளசரவாக்கம் சட்டம் – ஒழுங்குக்கும் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மணி சூளைமேடு சட்டம் – ஒழுங்குக்கும், சுரேஷ் ஜாம் பஜார் சட்டம் – ஒழுங்குக்கும், முத்துராஜ் வில்லிவாக்கம் சட்டம் – ஒழுங்குக்கும், ஜோசலின் அருண் செல்வி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சமுத்திரக்கனி தலைமை செயலகம் குற்றப்பிரிவுக்கும், மனோஜ் குமார் மயிலாப்பூர் குற்றப்பிரிவுக்கும், ரவிந்திரன் மாம்பலம் குற்றப்பிரிவுக்கும், ராமகிருஷ்ணன் சேத்துப்பட்டு குற்றப்பிரிவுக்கும், லோகேஸ்வரன் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், பிரேம்குமார் பெரியமேடு குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், ராஜசேகர் அண்ணா சாலை குற்றப்பிரிவுக்கும், சுந்தர் ஏழுகிணறு குற்றப்பிரிவுக்கும், அருள்மணி அண்ணாநகர் குற்றப்பிரிவுக்கும், மோகன்ராம் வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், மதன்குமார் யானைகவுனி குற்றப்பிரிவுக்கும், பொந்திலக்ராஜ் புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், அருண் அரசு மருத்துவமனை -II, கோபிநாத் மாதவரம் குற்றப்பிரிவுக்கும், மனோஜ் அபிராமபுரம் குற்றப்பிரிவுக்கும், வேணுகோபால் ஐஓசி காவல் நிலையத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே எஸ்.ஐ.யில் இருந்து பதவி உயர்வு பெற்று, இன்ஸ்பெக்டர்களாக சென்னை மாநகருக்கு ஒதுக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு தற்போது புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: