திண்டிவனம், ஜன. 8: திண்டிவனம் அடுத்த கோரக்கேணி பகுதியில் மதுவிலக்கு அமலாக்க இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர். அதில் வந்த 2 பேர் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்து தெரியவந்தது. விசாரணை செய்ததில் வந்தவாசி அடுத்த சாலமேடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(35), பிரகாஷ்(35) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
