எந்திரவியல் ஆய்வகத்தில் சோலார் வீடு தயாரிப்பு மாணவர்களுக்கு பயிற்சி காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில்

வேலூர், ஜன.8: காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்ட எந்திரவியல் ஆய்வகத்தில் சோலார் வீடு தயாரிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக எந்திரவியல் ஆய்வகங்கள் அமைக்க 15 பள்ளிகள் தேர்வானது. அதில் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியும் தேர்வானது இப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா எந்திரவியல் ஆய்வகத்தினை திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று எந்திரவியல் ஆய்வகம் பயிற்சி வகுப்பு தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியை தாரகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியை லலிதா முன்னிலை வகித்தார். தனியார் நிறுவன அலுவலர் சதிஷ், எந்திரவியல் ஆய்வக அலுவலர் சசிகலா, ஆய்வக பொறுப்பாளர் சதிஷ் ஆகியோர் மாணவர்களுக்கு எந்திரவியல் ஆய்வகத்தில் நேற்றைய வகுப்பில், சூரிய ஒளியினை பயன்படுத்தி வீடுகளுக்கு எப்படி மின்சாரம் பெறுவது, அதாவது சோலார் வீடுகள் அமைப்பது என்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் சோலார் வீடுகள் தயாரித்து அசத்தினர். இந்த ஆய்வக வகுப்பு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் வாரத்திற்கு 2பாடமாக கற்பிக்கப்படும் என்று தலைமை ஆசிரியை தெரிவித்தார்.

Related Stories: