ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளபதிவு

டெல்லி: ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் நரேந்திரமோடி எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். துணிச்சலும், வியூகத் திறனும் கொண்ட வேலு நாச்சியார் இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவர். இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை என காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர் வேலுநாச்சியார். வேலுநாச்சியாரின் தியாகமும், தொலைநோக்கு தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என புகழாரம் தெரிவித்தார்.

Related Stories: