மே.வங்கத்தில் பேரவை தேர்தலுக்கு முன்பாக மீண்டும் காங்கிரசுக்கு தாவிய திரிணாமுல் எம்பி

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட ஆயத்த பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சிகளும் பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மவுசம் நூர்(46) நேற்று மீண்டும் காங்கிரசில் இணைந்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுசெயலாளர் குலாம் அகமது மிர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சுபாங்கர் சர்க்கார் ஆகியோர் முன்னிலையில் மவுசம் நூர் காங்கிரசில் மீண்டும் இணைந்தார். 2009 முதல் 2019 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த மவுசம் நூர், மேற்குவங்கத்தின் மால்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வரும் ஏப்ரலில் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைவதால், நடைபெற உள்ள பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மால்டா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: