திருப்பதியில் 2025ம் ஆண்டில் ரூ.1,383.90 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை, தலைமுடி காணிக்கை, நன்கொடை ஆகியவற்றை செலுத்துகின்றனர். கடந்த 2025ம் ஆண்டில் 2.61 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.1,383.90 கோடி காணிக்கையாக செலுத்தினர். 88.83 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 2024ம் ஆண்டு 6.30 கோடி பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் 2025ம் ஆண்டில் 7.42 கோடி பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் 2024ம் ஆண்டில் 12.14 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் 2025ம் ஆண்டில் 13.51 கோடி லட்டுகள் விற்கப்பட்டன.

Related Stories: