மேற்குவங்க வெள்ள நிவாரணத்தில் மோசடி மம்தா பானர்ஜி ஆட்சி மீது ரூ.100 கோடி ஊழல் புகார்: பா.ஜ பரபரப்பு குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண நிதியில், ரூ.100 கோடி மோசடி நடந்துள்ளதாக 700 பக்க அறிக்கையை கொல்கத்தா நீதிமன்றத்தில் சிஏஜி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சிஏஜியின் இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பாஜ வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவு: வெள்ள நிவாரண மோசடி குறித்து சிஏஜி அறிக்கையில் 6,965 நபர்கள் ஒரே வங்கிக் கணக்கில் பல பரிவர்த்தனைகள் மூலம் வெள்ள நிவாரணத் தொகையை பெற்றுள்ளனர். ஹரிச்சந்திரபூர் 2 தொகுதியில் ஒரே நபர் 42 முறை நிவாரணத் தொகையை பெற்றுள்ளார். கலெக்டரின் அறிக்கையில் வீடுகளுக்கு எந்த சேதமும் இல்லை என்று குறிப்பிட்ட நிலையிலும், வீடுகளுக்கான சேதத்திற்காக ரூ.7.50 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்புடையவர்கள் உட்பட 108 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள், அவர்கள் வழக்கமான சம்பளம் பெற்றபோதிலும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கான சலுகைகளை பெற்றுள்ளனர். மேலும் வெள்ள நிவாரணத்திற்காக விண்ணப்பிக்காத நபர்களுக்கு ரூ. 7 கோடி மேல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ கோப்புகள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இது தடயங்களை மறைக்கும் முயற்சிகள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: