உத்தரபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் அரசுப்பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்

ஜெய்ப்பூர்: நடப்பு நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தவும், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தினசரி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்ற நடைமுறையை யோகி அரசு கொண்டு வந்துள்ளது. அதே போல் ராஜஸ்தான் அரசு பள்ளியிலும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,’ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் குறைந்தது தினமும் இரண்டு செய்தித்தாள்கள் வாங்க வேண்டும். அது ஒன்று ஆங்கில மொழியிலும், மற்றொன்று இந்தி மொழியிலும் இருக்க வேண்டும். காலையில் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது செய்தித்தாளை வாசிக்க வேண்டும். தலையங்கங்கள், விளையாட்டு, தேசிய மற்றும் உலக செய்திகளை படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கும் மாணவர் பள்ளிக்கு 30 நிமிடங்களுக்கு முன்பே வந்து தயாராக வேண்டும். தினமும் கூடுதலாக 5 புதிய சொற்கள் மற்றும் அவற்றின் விளக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய தலையங்கங்கள் மற்றும் செய்திகளை படிக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: