தா.பழூர், டிச.31: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்ரீபுரந்தான் மேல தெருவை சேர்ந்த சகுந்தலா (63) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அதில், வீட்டின் பின்புறத்தில் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
