5.12.2024 முதல் 11.12.2024 வரை
சாதகங்கள்: 12ல் சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பு. சுகங்கள் அதிகரிக்கச் செய்யும் அமைப்பு. பத்தில் சூரியன் இருப்பதும் அனுகூலம்தான். எதையும் சமாளித்துக் கொள்ளலாம் என்கின்ற மன தைரியம் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. ஜன்மச் சனியாக இருந்தாலும், அவர் ராசிக்கு உரியவர் இருப்பதால், பெரும் இடையூறு செய்யமாட்டார். 6ல் உள்ள செவ்வாய் எல்லா பிரச்னைகளையும் சமாளிக்க வைப்பார்.
கவனம் தேவை: தன் கையே தனக்கு உதவி என்பது போல சுய நம்பிக்கையோடு தைரியமும் முக்கியம். அவசர குணமும் யோசிக்காமல் செய்யும் சில காரியங்களும் பிரச்னைகளை வரவழைத்துவிடும். இரவு நேரத்தில் வாகனத்தை கவனத்தோடு ஓட்டவும். காரணம், செவ்வாய் சுக்கிரன் சந்திப்பு விபத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை பசுவுக்கு கீரை, பழம் வழங்குங்கள். ராகு காலத்தில் துர்க்கையை வணங்குங்கள் தொல்லைகள் குறையும்.