ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தின் மூலம் பிரபலமானவர், ஜூலி. முன்னதாக நர்சாக பணியாற்றியுள்ள அவர், சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு விளம்பர படங்களில் தோன்றினார். டி.வி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார். ‘அம்மன் தாயி’, ‘மன்னர் வகையறா’, ‘நான் சிரித்தால்’, ‘அபியும் அனுவும்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவித்த அவர், தனது காதலன் முகமது ஜக்ரீமை திருமணம் செய்கிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது அவரது திருமண தேதி முடிவாகியுள்ளது. வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி வெள்ளி அன்று மாலை, சென்னை பரங்கிமலை செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் ஜூலி திருமணம் நடக்கிறது. அன்று 7 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
