தி பெட் விமர்சனம்…

சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஸ்ரீகாந்த், பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர், வாரத்தின் கடைசி நாட்களை கொண்டாட ஊட்டிக்கு செல்கின்றனர். அவர்களுடன் கால்கேர்ள் சிருஷ்டி டாங்கே இருக்கிறார். அங்குள்ள ரிசார்ட்டில் ஐந்து பேரும் தங்குகின்றனர். ஸ்ரீகாந்தை தவிர மற்ற மூவரும் அதிகமாக மது அருந்தியதால் தூங்கிவிடுகின்றனர். ஸ்ரீகாந்தும், சிருஷ்டி டாங்கேவும் வந்த வேலையை விட்டுவிட்டு, இரவு நேரத்தில் ஊட்டியின் அழகை ரசிக்க காட்டுக்கு செல்கின்றனர்.

அங்கு தனது காதலை ஸ்ரீகாந்த் சொல்ல, அதை சிருஷ்டி டாங்கே ஏற்க மறுக்கிறார். அப்போது ஸ்ரீகாந்துடன் வந்த விக்ரம் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த போலீஸ் விசாரிக்கிறது. திடீரென்று சிருஷ்டி டாங்கே மாயமாகிறார். அவர் என்ன ஆனார்? விக்ரமை கொன்றது யார்? ஸ்ரீகாந்தின் காதல் ஜெயித்ததா என்பது மீதி கதை. கொண்டாட்ட உணர்விலும், காதலை வெளிப்படுத்துவதிலும் யதார்த்தமாக நடித்துள்ள ஸ்ரீகாந்த், இளைஞனின் படுகொலைக்கு பிறகு நடுங்குவது பரிதாபத்தை வரவழைக்கிறது.

கத்தி மேல் நடப்பது போன்ற கேரக்டரில் சிருஷ்டி டாங்கே துணிச்சலாக நடித்துள்ளார். அவரது இயல்பான அழகும், நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது. பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர், தங்கள் கேரக்டருக்கு ஏற்ப நடித்துள்ளனர். போலீஸ் அதிகாரி ஜான் விஜய் மற்றும் தேவிப்பிரியாவின் விசாரணை துரிதமாக இருக்கிறது.

ஜான் விஜய்க்கும், ரிஷாவுக்குமான காட்சிகள் தேவை இல்லை என்றாலும், ஓரளவு சிரிக்க வைக்கிறது. சிருஷ்டி டாங்கேவின் அம்மா திவ்யா சிறப்பாக நடித்துள்ளார். ஊட்டியின் அழகை கே.கோகுல் கேமரா கண்முன் கொண்டு வந்துள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தாஜ்நூர் கூடுதலாக உழைத்துள்ளார். காதல் கதை திடீரென்று கிரைம் திரில்லருக்கு மாறினாலும், நிறைய காட்சிகள் மெதுவாக நகர்வதை இயக்குனர் எஸ்.மணிபாரதி கவனித்திருந்தால் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும்.

Related Stories: