குழந்தைகளுக்கான அனிமேஷன் படம்

 

இனிகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான அனிமேஷன் படம், ‘கிகி அன்ட் கொகொ’. இதை பி.நாராயணன் இயக்கியுள்ளார். கோகுல்ராஜ் பாஸ்கர் விஎப்எக்ஸ் இயக்குனராகவும், ஜி.எம்.கார்த்திகேயன் விஎப்எக்ஸ் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர். அவர் கூறுகையில், ‘குழந்தை என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வரம். அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை படத்தில் காட்டியுள்ளோம். யாரையும் அடிக்கவில்லை, யாரும் பறக்கவில்லை. நாம் சராசரி மனிதனாக இருக்கும்போது யாருக்காவது உதவுகிறோம், சிரிக்கிறோம், நன்றியை நினைத்து பார்க்கிறோம், அன்புடன் இருக்கிறோம்.

இந்த நடைமுறை விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறோம். குழந்தைகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்களின் குணம்தான். எல்லோரையும் அன்பாக வைத்திருங்கள், அன்பு உங்களுக்கு திரும்ப கிடைக்கும்’ என்றார். தலைமை செயல் அதிகாரி மீனா கூறும்போது, ‘இருபது வித்தியாசமான கதாபாத்திரங்களை இயக்குனர் படைத்துள்ளார். அதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், னிகா’ என்றார். இசை அமைப்பாளர் சி.சத்யா கூறுகையில், ‘படத்தின் டைட்டிலே ஆங்கில பாடலுக்கு இசை அமைப்பது போன்ற உற்சாகத்தை தந்தது.

இதில் பணியாற்றியது எனக்கு புது அனுபவம். எந்த கவலை இருந்தாலும், அந்த இடத்தில் குழந்தைகள் இருந்தால் தனி எனர்ஜி கிடைக்கும். அப்படி எனக்கு பிடித்த குழந்தைகளுக்கான படத்துக்கு இசை அமைத்துள்ளேன்’ என்றார்.

Related Stories: