இந்த ஆண்டில் நிறைய கற்றுக்கொண்டேன்: பாக்யஸ்ரீ போர்ஸ்

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகையும், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காந்தா’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவருமான பாக்யஸ்ரீ போர்ஸுக்கு இந்த ஆண்டு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 2024ல் ‘மிஸ்டர் பச்சன்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானாலும், இந்த ஆண்டில் நிறைய படங்களில் நடித்து, தென்னிந்திய திரையுலகில் பரபரப்பான நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்த ஆண்டில் அவர் நடித்த ‘கிங்டம்’, ‘காந்தா’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், பாக்யஸ்ரீ போர்ஸ் தனது யதார்த்தமான நடிப்பு மற்றும் அழகின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.

வரும் 2026ல் அவர் நிறைய படங்களில் நடித்து வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கு நன்றி தெரிவித்து பாக்யஸ்ரீ போர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘2025ம் ஆண்டு எனக்கு அதிகமாக கற்றுக்கொள்ள உதவிய ஆண்டாக இருந்தது. எனவே, இந்த வருடத்துக்கு எனது மிகப்பெரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன். அன்பு மற்றும் புன்னகையுடன் நிறைந்த வருடமாக இருந்ததற்கும் மிகவும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தற்போது அகில் அக்கினேனி ஜோடியாக ‘லெனின்’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.

Related Stories: