ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ராதாரவி, ரவிமரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய படங்களை தயாரித்து இயக்கிய ராம்தேவ், இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, பேரரசு, நிழல்கள் ரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் நடிக்கின்றனர். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்ய, குணசேகரன் அரங்கம் அமைக்கிறார். துர்காஸ் எடிட்டிங் செய்ய, கண்ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படம் குறித்து ராம்தேவ் கூறுகையில், ‘அரசியல் கதையுடன் காமெடி கலந்து உருவாகும் இப்படம், சமூகத்துக்கு தேவையான கருத்துகளை சொல்கிறது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் தேனியில் தொடங்குகிறது’ என்றார். ரவிமரியா ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜீவா ஹீரோவாக அறிமுகமான ‘ஆசை ஆசையாய்’, நட்டி நட்ராஜ் நடித்த ‘மிளகா’ ஆகிய படங்களை எழுதி இயக்கியுள்ள ரவிமரியா, பிறகு வில்லனாகவும், காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார். இப்போது கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
