சென்னை: ரசிகர்களால் ‘நேஷனல் கிரஷ்’ என்று சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா, இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் உருவான ‘காக்டெயில்’, ‘மைசா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகிறது. ‘புஷ்பா 1: தி ரைஸ்’, ‘புஷ்பா 2: தி ரூல்’ ஆகிய மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாக மாறிய ராஷ்மிகா மந்தனா, தமிழில் விஜய் ஜோடியாக ‘வாரிசு’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரூ.300 கோடி வசூலித்தது.
இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக அவர் நடித்த ‘அனிமல்’ என்ற படம் ரூ.1,000 கோடி வசூலித்தது. அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற படம் ரூ.1,800 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படி தொடர்ந்து கிடைத்த வெற்றியால் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள ராஷ்மிகா மந்தனாவின் செயலை அறிந்த தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த அவர், தற்போது தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் மிகப் பிரமாண்டமான படங்கள் என்றால், ரூ.13 கோடி வரை சம்பளம் கேட்க அவர் திட்டமிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 26ம் தேதி தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்யும் ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். அவருக்கு விஜய் தேவரகொண்டா கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
