திருவனந்தபுரம்: நேற்று முன்தினம் துல்கரின் 42வது பிறந்த நாளில் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அவ்வகையில் ‘வரனே அவஷ்யமுந்த்’ படத்தில் துல்கருடன் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், ‘‘துல்கரின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் நிறைய எழுதி நீண்ட பதிவினைப் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவிப்பேன். இந்தப் பிறந்த நாளில் கொஞ்சம் ஸ்பெஷலாக நான் நடிக்கும் ‘லோகா’ படத்தின் டீஸரைப் பகிர்ந்து வாழ்த்துச் சொல்கிறேன்.
திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர். கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் எனக்காக வந்து நிற்பது, அறிவுரைகள் வழங்குவது அவராகத்தான் இருக்கும். நான் தனியாக உணர்ந்ததில்லை அதற்குக் காரணம் நீங்கள்தான் (துல்கர்). நீங்கள் இல்லையென்றால் நான் என்னவாகிருப்பேன் என்றே எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு எல்லா தருணங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
