83வது கோல்டன் குளோப் 2 அடலசென்ஸ் விருதுகளை வென்றது: சிறுவன் ஓவன் கூப்பருக்கும் விருது

லாஸ்ஏஞ்சல்ஸ்: 2025ம் ஆண்டுக்கான 83வது கோல்டன் குளோப் விருது லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று வழங்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள தகவலாக ‘அடலசென்ஸ்’ வெப் சீரீஸ்க்கு இரண்டு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது தான். சிறந்த லிமிடேட் சீரீஸ் பிரிவில் சிறந்த சீரீஸ் என்ற விருதும், சீரீஸில் நடித்துள்ள சிறுவன் ஓவன் கூப்பர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றார்.

மொத்தம் 5 பிரிவுகளுக்கு நாமினேஷன் ஆன ‘அடலசென்ஸ்’ இரண்டு விருதுகளை வென்றது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மொத்த சீரீஸின் ஒவ்வொரு எபிசோடும் சிங்கிள் ஷார்ட்டில் எடுத்தது போல படமாக்கியதும் பாராட்டுக்களைப் பெற்றது. நெட் ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் சீரீஸ் உலகம் முழுவது சுமார் 96 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

கோல்டன் குளோப் விருது ஓவன் கூப்பருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானதும், ரசிகர்கள் பலரும் அந்த சான்விட்ச் காட்சிக்காகவே அவருக்கு விருது கொடுக்கலாம் என்று பாராட்டி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், 13 வயதில் அந்த வெப் சீரிஸில் நடித்த ஓவன் கூப்பர் தனது 16வது வயதில் தனது முதல் வெப் சீரீஸ்க்காகவே கோல்டன் குளோப் விருது வாங்கி உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் இவர் ஏற்கனவே எம்மி விருதை வாங்கி இருந்தார். மிகக் குறைந்த வயதில் எம்மி விருது வென்ற நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். குளோயி ஜாவோ இயக்கத்தில் உருவான ‘ஹாம்நெட்’ திரைப்படம் ‘சிறந்த திரைப்படம் – டிராமா’ பிரிவில் விருதை வென்றுள்ளது. வில்லியம் ஷேக்ஸ்பியரின் குடும்பம் மற்றும் அவரது மகனின் மரணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் நாயகி ஜெஸ்ஸி பக்லி சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்றார். இசை அல்லது நகைச்சுவை பிரிவில், பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் வெளியான ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும், இப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய இரண்டு விருதுகளை வென்றார். சிறந்த நடிகருக்கான விருதை தி சீக்ரெட் ஏஜென்ட் படத்தில் நடித்த வாக்னர் மௌரா வென்றார். சிறப்பு விருந்தினராக பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

 

Related Stories: