அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா நடித்துள்ள படம், `மன சங்கர வரபிரசாத் காரு’. ஒரு படம் ரிலீசானால், நேர்மையான கருத்துகளை விட போலியாக பரப்பப்படும் கருத்துகள்தான் அதிகம். எனவே, இதை தடுக்கும் வழியை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் தளங்களில் ரேட்டிங் மற்றும் படத்தை பற்றிய கருத்துகளை பகிரக்கூடிய வசதி இருக்கிறது. இதுபோன்ற தளங்களில் போலியான ரேட்டிங் பதிவிட்டு, நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதை தடுக்கும் வகையில், டிக்கெட் முன்பதிவு தளங்களில் ரேட்டிங் மற்றும் கருத்துகளை பதிவிடும் வசதி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான `தி டெவில்’ படத்துக்கும் மற்றும் சமீபத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான ‘மார்க்’ படத்துக்கும், சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி நடிப்பில் வெளியான ‘45’ என்ற படத்துக்கும் இதுபோன்ற தடை நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டு இருந்தது. தற்போது இந்த தடையை பெற்றுள்ள 4வது இந்திய படமாக `மன சங்கர வரபிரசாத் காரு’ மாறியுள்ளது.
