ரூ.1,296 கோடி வசூலித்த ‘துரந்தர்’

நடிகை யாமி கவுதமின் கணவர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்‌ஷய் கன்னா, அர்ஜூன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜூன் நடித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த ‘துரந்தர்’ என்ற இந்தி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் ‘ஆபரேஷன் லியாரி’, இந்திய உளவுத்துறை நிறுவனமான ‘ரா’ மேற்கொண்ட ரகசிய பணிகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் சொல்லப்பட்டிருந்த சில கருத்துகளுக்காக, 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. நேற்றுடன் இப்படம் உலக அளவில் ரூ.1,296 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய அளவில் ரூ.1,011.73 கோடியும், மற்ற நாடுகளில் ரூ.284.10 கோடியும் வசூலாகியுள்ளது.

Related Stories: