30 க்கு மேல கல்யாணத்த பத்தி பேசுங்க… ஸ்ரீலீலா கறார்

சென்னை: தெலுங்கில் ‘பெல்லி சந்தடி’ என்ற படத்தில் அறிமுகமான லீலா, சில ஹிட் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். இந்தநிலையில், தனது திருமணம் குறித்து அவர் கூறியுள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் பேசியது வருமாறு:
இப்போது எனக்கு 24 வயது ஆகிறது. 30 வயதுக்கு மேல் என் திருமணத்தை பற்றி யோசிப்பேன். அதுவரை யாரும் என் திருமண விஷயத்தை பற்றி பேச வேண்டாம். மற்றபடி யாரையோ ரகசியமாக காதலிப்பதாக வரும் செய்திகள் எல்லாம் வதந்தி. யாரையும் நான் காதலிக்கவில்லை. படப்பிடிப்புக்கு சென்றாலும், மற்ற வெளியிடங்களுக்கு சென்றாலும், எனது அம்மாவின் துணையுடன்தான் செல்கிறேன். அப்படி இருக்கும்போது, நான் எப்படி காதலில் சிக்க முடியும்? சமீபத்தில் கூட அமெரிக்காவுக்கு அம்மாவுடன்தான் சென்றேன். அப்படி இருந்தும் என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது.

அதை எப்படி தடுக்க முடியும்?
உண்மை இல்லாத சில செய்திகளை கடந்து செல்வதே நல்லது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நான் நடித்திருந்த ‘பராசக்தி’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. தமிழில் எனது அறிமுக படத்துக்கு ரசிகர்களிடையே இவ்வளவு வரவேற்பு மற்றும் பாராட்டு கிடைத்துள்ளதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. இதில் நான் சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருந்தேன்.

Related Stories: