மியா ஜார்ஜின் திடீர் மாற்றம்

தமிழில் திரைக்கு வந்த ‘அமரகாவியம்’, ‘இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ரம்’, ‘எமன்’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் மியா ஜார்ஜ். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த அவர், கடந்த 2020ல் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்துகொண்டு, ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 2024ல் மியா ஜார்ஜ் நடித்து வெளியான ‘தலவன்’ என்ற மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனது சோஷியல் மீடியாவில் புத்தகம் குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘கடந்த மூன்று வருடங்களுக்கு முன்புதான் புத்தகம் படிப்பதில் நான் தீவிர ஆர்வம் காட்டினேன்.

எனது நோக்கம் என்னவென்றால், ஸ்கிரீன் டைமிங்கை குறைக்கவும், வெட்டியாக நாட்களை கடத்தாமல் பயனுள்ளதாக மாற்றவும், அர்த்தமுள்ள நூல்களை படிக்க முடிவெடுத்தேன். தொடக்கத்தில் ஃபீல்குட் புத்தகங்களை படித்தேன். பிறகு சுயமுன்னேற்றம் குறித்த புத்தங்களை படித்தேன். ஒவ்வொரு ஆண்டும் நான் புதிய புத்தகங்களை தேடித்தேடி வாங்கி படித்தேன். புத்தகங்களை அடுக்கி வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கே பயணத்துக்கு சென்றாலும், என்கூடவே சில புத்தகங்கள் இருக்கும். புத்தகம் படிப்பது தற்போது எனக்கு தீவிரமான ஒரு பழக்கமாகி விட்டது. கடந்த 2025ல் மட்டும் 36 புத்தகங்கள் படித்தேன். ஒரு மாதத்துக்கு 3 புத்தகங்கள் படிப்பேன். அதிகமாக படிக்கும் பழக்கம் இல்லாத ஒருவருக்கு இது ஒரு நல்ல முன்னேற்றம்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: