புத்தக விழாவில் திரைப்பிரபலங்கள்

சென்னை: உளவியலாளரும், கல்வியாளருமான சிந்து மேனகா எழுதிய முதல் நூலான ‘நாம் சத்தமாக சொல்லாதவை’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் வசந்த் எஸ். சாய், நடிகர், இயக்குநர் கார்த்திக் குமார், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவர் சுதா சேஷய்யன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் பி. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டனர்.

வசந்த் எஸ். சாய் பேசும்போது, ‘‘இந்த நூலில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் ஆழம் மிக்கவை. அதனை நேர்மையுடன் எழுத்தாளர் விவரித்து இருப்பதால். வாசகர்கள் அதனுடன் ஒன்றிணைய வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

Related Stories: