பப்பு ஹீரோவாகும் ‘மைடியர் டாலி’

ஏ.அரவிந்த்ராஜ் எழுதி இயக்கியுள்ள படம், ‘மைடியர் டாலி’. சிம்மமூர்த்தி சினிமாஸ் சார்பில், 87 வயது நிரம்பிய ஆர்.எம்.ஜெயராமச்சந்திரன் தயாரித்துள்ளார். ஹீரோவாக விஜே பப்பு, ஹீரோயினாக அனுபமா, முக்கிய வேடம் ஒன்றில் ராஜவேலு நடித்துள்ளனர். பாலாஜி சேகர் ஒளிப்பதிவு செய்ய, பாசில் இசை அமைத்துள்ளார். படத்தை பற்றி ஏ.அரவிந்த்ராஜ் கூறுகையில், ‘ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய விஜே பப்பு, அனுபமா இருவரும் திடீரென்று வெவ்வேறு இடத்துக்கு மாற்றலாகி செல்கின்றனர். ஏற்கனவே அனுபமா மீது ஈர்ப்பு கொண்ட விஜே பப்பு, அந்த விஷயத்தை அவரிடம் சொன்னது இல்லை என்பதால், இந்த விஷயம் அனுபமாவுக்கு தெரியாது.

இந்நிலையில், விஜே பப்புவுக்கு அவரது பெற்றோர் மணப்பெண் பார்க்கின்றனர். விருப்பமே இல்லாமல் மணப்பெண் வீட்டுக்கு விஜே பப்பு செல்ல, அங்கு அவரால் ஒருதலையாய் காதலிக்கப்பட்ட அனுபமா இருக்கிறார். ஆனால், யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற முடிவுடன் அவர் இருக்கும் தகவல் விஜே பப்புவுக்கு தெரிகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. காமெடி, காதல், சென்டிமெண்ட் ஆகிய ஜனரஞ்சக அம்சங்களுடன் படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது’ என்றார்.

Related Stories: