சின்னத்திரைக்கு வருகிறார் மிஷ்கின்!

2006ஆம் ஆண்டு ” சித்திரம் பேசுதடி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து ” அஞ்சாதே” , ” நந்தலாலா”, ” முகமூடி”, ” யுத்தம் செய்” , ” துப்பறிவாளன்”, ” ஓநாயும் ஆட்டுக்குட்டியும் “, ” பிசாசு”, ” சைகோ” படங்களை இயக்கினார். பின்னர் நடிகராக ” யூத்” படம் மூலம் நடிக்க துவங்கியவர் 15 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சினிமாவில் நான் சந்தோஷமாக இல்லை என வெளிப்படையாக மேடையில் பேசிய மிஸ்கின், தற்போது ஒரு சின்னத்திரை பிரபல நிகழ்ச்சி மூலம் நடுவராக பங்கு பெற இருக்கிறார். பிரபல சேனலில் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நான்கு நடுவர்களில் ஒருவராக மிஸ்கினும் பங்கு பெற இருக்கிறார். அவருடன் ஏற்கனவே நடுவர்களாக இருந்த பாடகி அனுராதா, பாடகர் உன்னி கிருஷ்ணன், இசையமைப்பாளர் தமன், உள்ளிட்டோரம் பங்கு பெற இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் தனியார் தொலைக்காட்சியில் துவங்கப்பட இருக்கிறது.

Related Stories: