சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ, மிகப்பெரிய பங்களாவை வேறு ஒருவரிடம் இருந்து மிரட்டி எழுதி வாங்கியுள்ளார்.அதே பங்களாவிற்கு ரௌடியான ஒருவனும் சொந்தம் கொண்டாடுகிறான். இந்நிலையில் கிராமத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி இவர்களையெல்லாம் எவ்வாறு பழி வாங்குகிறது என்பதே யாமன் படத்தின் கதை. கதாநாயகனாக சக்தி சிவன் கதாநாயகியாக காயத்ரி ரேமா வில்லனாக சம்பத்ராம் காமெடியனாக உதயராஜ் மேலும் இயக்குனர் எல்.ராஜா, ஆதேஷ் பாலா நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு -மாதவன்,இசை- சக்திசாம், பாடல்கள்- உதய பாலா, சுஜய். படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி கே.எஸ். எம்.ஸ்க்ரீன் பிளே பிலிம்ஸ் மூலமாக மணிகண்டன் தயாரித்து இயக்கியுள்ளார். ‘இது பயத்தை தூண்டும் பேய் படம். படத்தில் பேய் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது’ என்கிறது படக்குழு. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘‘வாடா வாடா வீர கருப்பா” பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மே 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் இத்திரைப்படம் வெளியிடப்படுகிறது.