ஓமலூர், ஜூன் 14: ஓமலூர் பஸ்நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய அரசு பஸ், ஜாலிகொட்டாய் வரை சென்றது. ஒவ்வொரு பஸ் நிறுத்தமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ், ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பழுதாகி நின்றது. இதனால், சிறிதுநேரம் காத்திருந்த பயணிகள் அந்த வழியாக வந்த மாற்று பேருந்துகளில் ஏறி சென்றனர். தொடர்ந்து பஸ் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை ஓரமாக நிறுத்தி, பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்கள், தொழிலாளர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
The post நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ் appeared first on Dinakaran.