அடிதடி வழக்கில் வாலிபர் கைது

கெங்கவல்லி, ஜூலை 20: கெங்கவல்லி அருகே, நடுவலூர் ஊராட்சி பள்ளக்காடு கிராமத்தில் ரத்தினம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் முன்விரோதம் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ரத்தினம் தரப்பில் மணி என்பவர் ஆத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நடுவலூர் ஊராட்சி பள்ளக்காடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் மணி (41) என்பவர் மீது 27.6.25 அன்று நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதன் பேரில் எஸ்ஐ கணேஷ்குமார் தலைமையில், மணியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, சொந்த ஊருக்கு மணி வந்துள்ளார். தகவலின் பேரில், போலீசார் மணியை கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து நீதியரசர் மணியை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

The post அடிதடி வழக்கில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: