டிட்டோ-ஜாக் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 18: சேலம் கோட்டை ைமதானத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் நாகராஜன் உரையாற்றினார்.

இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்கி, ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து டிட்டோ ஜாக் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை சேலம் டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில துணை பொதுச்செயலாளர் நாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களை, மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும். தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடைபெறும்,’’ என்றார்.

The post டிட்டோ-ஜாக் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: