அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் பேச சிபாரிசு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை சம்பந்தமான கேள்விக்கு உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். அப்போது துணை கேள்வி கேட்க அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரத்திற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். அப்போது அவர் இருக்கையில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இருந்தார். சபாநாயகர் பேச அனுமதித்ததும் அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள மைக்கை நோக்கி சென்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு உறுப்பினர் இருக்கையில் இல்லை என்று கூறி அடுத்த உறுப்பினரை பேச அனுமதி வழங்கினார். தொடர்ந்து மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏ சரஸ்வதி பேசினார். தொடர்ந்து அடுத்த கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு சென்று விட்டார். அப்போது அவையில் இருந்த முதல்வர் மு.கஸ்டாலின் தளவாய் சுந்தரத்துக்கு பேச வாய்ப்பு கொடுங்கள் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் கூறினார். முதல்வர் சொன்னதை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, தளவாய் சுந்தரத்தை பேச அனுமதித்தார். தொடர்ந்து தளவாய் சுந்தரம் தனது கேள்வியை எழுப்பினார். அவர் பேசுவதற்கு முன்பாக முதல்வருக்கு மிக்க நன்றி என்று பேச்சை தொடங்கினார்.

The post அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் பேச சிபாரிசு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: