தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 14ம் தேதி: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மே 15ம் தேதி: நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 16ம் தேதி: கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் நாளை முதல் வெப்பச் சலனத்தால் மழை பெய்வது தீவிரமடையும்: டெல்டா வெதர்மேன் தகவல் appeared first on Dinakaran.